வேலூர்: தமிழகம் முழுவதும் மணல் கடத்தலை தடுக்கும் வகையில் கண்காணிப்பு மற்றும் சோதனை நடவடிக்கைகள் தீவிர மடைந்துள்ளன. இந்நிலையில் மணல் கடத்தலில் ஈடுபட்ட கல் லூரி மாணவர் ஒருவரும் சிக்கி யுள்ளார். அவருடன் மேலும் ஏழு பேரை வேலூர் போலிசார் மடக்கிப் பிடித்து கைது செய்துள்ளனர். தமிழகத்தில் தற்போது கடும் மணல் தட்டுப்பாடு நிலவி வருகி றது. இதனால் மணல் விலை மிகவும் அதிகரித்துள்ளது.
இதையடுத்து தமிழக அரசே செயற்கை மணல் விற்பனையில் ஈடுபட உள்ளதாக அண்மையில் தகவல் வெளியாகி உள்ளது. மணல் விலை உயர்வு காரண மாகவும் அதிகரித்து வரும் அதன் விலை காரணமாகவும் கட்டுமானப் பணிகள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் மணல் கடத் தலைத் தடுப்பதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு காவல்துறைக்கு முதல்வர் எடப் பாடி பழனிசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார். இதையடுத்து மாநிலம் முழுவதும் ஆங்காங்கே சோதனை நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட்டு வருகின்றன.

