கட்சியை மீட்பதே இலக்கு: தினகரன் உறுதி

கட்சியை மீட்பதே இலக்கு: தினகரன் உறுதி

1 mins read
fd49df3a-160b-484b-b949-c150e95baef8
-

சென்னை: தனது தலைமையில் தனிக்கட்சி தொடங்க இருப்ப தாகக் கூறப்படுவது வெறும் வதந்தி என ஆர்கே நகர் தொகுதி எம்எல்ஏ டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். அதிமுகவை மீட்டெடுப்பதே தனது இலக்கு என்றும் மிக விரைவில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களை சந்திக்க இருப்பதாகவும் மதுரையில் அவர் செய்தியாளர் களிடம் பேசுகையில் குறிப்பிட்டார். "போக்குவரத்து ஊழியர்கள் பிரச்சினையில் அரசு அலட்சியமாக செயல்படுகிறது.

முதல்வர் மீதான குற்றச்சாட்டை போக்குவதற்கு போக்குவரத்துக் கழகத்துக்கு அரசு நிதி ஒதுக்கவேண்டும். "தவறான நபர்களிடம் அதிமுகவை தேர்தல் ஆணையம் ஒப்படைத்துவிட்டது. கட்சியை மீட்பதற்கான எனது சுற்றுப்பயணம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும்," என்றார் தினகரன். தமிழகத்தில் மக்களால் நிரா கரிக்கப்பட்ட ஆட்சி நடப்பதாகக் குறிப்பிட்ட அவர், மாநிலத்தில் எந்த நேரத்திலும் தேர்தல் வரலாம் என்றார்.