வெற்றிடத்தில் கம்பு சுற்றுகிறார் ரஜினி: சீமான் கடும் விமர்சனம்

வெற்றிடத்தில் கம்பு சுற்றுகிறார் ரஜினி: சீமான் கடும் விமர்சனம்

1 mins read
b8460eeb-2a95-4097-82e6-48df1e119099
-

சென்னை: ஜெயலலிதா இருந்தபோதே ரஜினி அரசியலுக்கு வராதது அப்பட்டமான கோழைத்தனம் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள் ளார். அவர் அளித்துள்ள அண்மைய பேட்டியில் ரஜினியின் செயல்பாடு வெற்றிடத்தில் கம்பு சுற்றுவது போல உள்ளதாக விமர்சித்துள்ளார். "ஜெயலலிதா, கருணாநிதி இருந்தபோதே களத்தில் இறங்கி எதிர்த்தவர் விஜயகாந்த். திரைக்கவர்ச்சி கதாநாயகனை அவதார புருஷர்களாக நினைத்த காலம் உண்டு. இப்போது அது தேவையில்லை," என்றார் சீமான். இப்போதைய அரசியல் போரில் ரஜினியை வெற்றி பெற விடப்போவதில்லை என்று குறிப்பிட்டுள்ள அவர், அரசியல் களத்தில் ரஜினியை எதிர்க்க தாம் காத்திருப்பதாகவும் கூறியுள்ளார்.