ஒதுக்கும் தலைமை: ஆ.ராசா கடும் அதிருப்தி

ஒதுக்கும் தலைமை: ஆ.ராசா கடும் அதிருப்தி

1 mins read
e0fd26c3-edea-4c50-8daf-ee10a88b7126
-

சென்னை: ஸ்பெக்ட்ரம் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ள ஆ.ராசா, கனிமொழி ஆகிய இரு வரின் செயல்பாடுகளுக்கு திமுக தலைமை திடீர் முட்டுக்கட்டை விதித்திருப்பது அக்கட்சியினர் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. அதனால் கட்சித் தலைமை மீது இருவரும் அதிருப்தி யில் இருப்பதாகக் கூறப்படுகிறது. ஸ்பெக்ட்ரம் வழக்கு தொடர்பில் பல்வேறு அதிரடி தகவல்களுடன் கூடிய புத்தகத்தை எழுதியுள்ளார் ஆ.ராசா. அதை மிக விரைவில் வெளியிட அவர் திட்டமிட்டிருந்தார். அப்புத்தகத்தில் காங்கிரஸ் கட்சி, முந்தைய ஐக்கிய முற் போக்கு கூட்டணி அரசு குறித்து அவர் கடுமையான விமர்சனங் களை முன்வைத்திருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் ஸ்பெக்ட்ரம் வழக்கில் இருந்து விடுதலையான பின்னர் காங்கிரஸ் கட்சி குறித் தும் முன்னாள் பிரதமர் மன் மோகன் சிங் குறித்தும் அவர் தெரிவித்த சில கருத்துகள் காங்கிரஸ் தலைமைக்கு அதிருப் தியை ஏற்படுத்தி இருப்பதாகத் தெரிகிறது. எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரசுடன் கூட்டணி அமைக்க ஸ்டாலின் திட்டமிடுவ தாகக் கூறப்படும் நிலையில், ஆ.ராசாவின் புத்தகம் அம்முயற் சிக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என திமுக மூத்த நிர்வாகிகள் சிலர் கருதுகின்றனர்.