தமிழக அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்களின் வேலை நிறுத் தம் நேற்று நான்காவது நாளாகத் தொடர்ந்தது. தற்காலிக ஓட்டுநர், நடத்துநர் கள் மூலமும் அண்ணா தொழிற் சங்கத்தைச் சேர்ந்தவர்களாலும் ஒருசில பேருந்துகள் இயக்கப்பட் டன. நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் பெரிய பாதிப்பு இல்லை என்றும் மக்களின் அவதி இன்று மீண்டும் தொடரக்கூடும் என்றும் ஊடகச் செய்திகள் குறிப்பிட்டன. இதற்கிடையே, வேலைநிறுத்தம் காரணமாக போக்குவரத்துத் துறை வருமானம் மூன்றில் ஒரு பங்காகக் குறைந்துவிட்டது.
நாள் ஒன்றுக்கு சராசரியாக ரூ.20 கோடி முதல் ரூ.22 கோடி வரை வந்துகொண்டு இருந்த எட்டு போக்குவரத்துக் கழகங்களின் வருமானம் நேற்று முன்தினம் ரூ.7 கோடியாக சுருங் கியது. குறிப்பாக மதுரை, கும்ப கோணம், கோயம்புத்தூர், விழுப் புரம் மாவட்ட போக்குவரத்துக் கழகங்களின் வருமானம் அடி மட்டத்தைத் தொட்டது. இந்நிலை யில், நேற்று முன்தினம் மட்டும் அடுத்தடுத்து ஐந்து பேருந்து விபத்துகள் நிகழ்ந்தன.
இதனால் யாருக்கும் காயமில்லை என்றபோதி லும் பேருந்துகள் சேதமுற்றன. இந்நிலையில், மதுரை நகர போலிசார் ஆறு போக்குவரத்துக் கழக ஊழியர்களைக் கைது செய் துள்ளனர். வேலைநிறுத்தத்தில் கலந்துகொள்ள மறுத்த மலைச்சாமி என்னும் ஓட்டுநரைத் தாக்கியதாக அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், தற் காலிக பேருந்து ஊழியர்கள் மீது தாக்குதல் நடத்தியதாக மாநிலம் முழுவதும் பலர் கைது செய்யப்பட்டு உள்ளனர். சக ஊழியர்களைத் தாக்கிய, பயணிகளை நடுவழியில் இறக்கிவிட்ட நூறு ஊழியர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிக்கப் பட்டுள்ளது.

