மலேசிய மணல் கப்பல் மங்களூர் சென்றது

மலேசிய மணல் கப்பல் மங்களூர் சென்றது

1 mins read

தூத்துக்குடி: தமிழ்நாட்டில் தனி யார் இறக்குமதி செய்யும் மணலை விற்பனை செய்ய தடை விதிக்கும் அரசாங்க நடைமுறைகள் அமலில் இருந்து வருவதால் தூத்துக்குடி வஉசி துறைமுகத்திற்கு மலேசியா விலிருந்து மணல் ஏற்றி வந்த கப்பல் வெள்ளிக்கிழமை மங்களூர் துறைமுகத்துக்குத் திருப்பிவிடப் பட்டது. 'எம்வி குரோட்டோன் ஈகிள்' என்ற கப்பல், மலேசியாவிலிருந்து 58,616 டன் ஆற்றுமணலை ஏற்றிக் கொண்டு புதன்கிழமை தூத்துக் குடி துறைமுகத்துக்கு வந்தது. 'டெல்டா இன்ஃபிராலாஜிஸ்டிக்' என்ற முகவை நிறுவனம் மூலம் அந்த மணலை 'ஆசிய ‌ஷிப்பிங் ஏஜென்சிஸ்' என்ற நிறுவனம் இறக்குமதி செய்தது.

ஏற்கெனவே 'எம்ஏஎம் என்டர் பிரைசஸ்' நிறுவனம் இறக்குமதி செய்த 55,445 டன் ஆற்று மணல் அந்த துறைமுகத்திற்குள்ளேயே கட்டுப்பாடு விதிக்கப்பட்டு வைக் கப்பட்டுள்ளது. அந்த மணலை விற்பனை செய்யலாம் என்று மத்திய அரசாங் கம் அனுமதி அளித்து, அதற்கு ஜிஎஸ்டி வரி செலுத்தப்பட்டு இருந்தாலும் மாநில அரசு இன்ன மும் அனுமதி வழங்கவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது. தமிழக அரசாங்கம் தமிழ் நாட்டிற்குள் வெளியிலிருந்து மணலை இறக்குமதி செய்வதன் தொடர்பில் கடுமையான வழிகாட்டி நெறிமுறைகளை அண்மையில் வெளியிட்டது.