திருநள்ளாறு: திருநள்ளாறு சனி பகவான் கோயிலில் கடந்த டிசம்பர் 19ஆம் தேதி நடந்த சனிப்பெயர்ச்சி விழாவுக்குப் பிறகு சனிக்கிழமை களில் பக்தர்களின் வருகை அதிக அளவில் உள்ளது. பக்தர் கள் அதிகம் வரும் நாட்களில் யாசகர்களின் எண்ணிக்கையும் அதிகமாக இருந்து வருகிறது. யாசகர்களுக்குப் பக்தர்கள் அன்னதானமாக வழங்கும் உணவுப் பொட்டலங்களை, அவர் கள் மீண்டும் கடைகளில் விற்று விடுகிறார்கள். யாசகர்கள் பற்றி தொடர்ந்து ஏராளமான புகார்கள் வருகின்றன.
இதனையடுத்து இப்போது யாசகர்கள் அனைவரும் நளன் குளம் எதிரே இருக்கும் பக்தர்கள் பல்நோக்கு கூடம் உள்ள வளாகத் தில் காலை அமரவைக்கப்பட்டு அவர்களுக்குக் காலை முதல் மாலை வரை உணவு, தண்ணீர் வழங்கப்படுகிறது. தேவை எனில் யாசகர்களுக்கு மருத்துவப் பரிசோதனையும் செய் யப்படுகிறது. பக்தர்கள் கூட்டம் குறைந்ததும் மாலையில் அவர்கள் வெளியில் அனுப்பப்படுகிறார்கள்.
திருநள்ளாறு சனி பகவான் கோயிலில் பக்தர்களுக்கு இடையூறு செய்யும் யாசகர்களைத் தடுக்கும் வகையில் அவர்கள் பல்நோக்கு வளாகத்தில் அமரவைக்கப்பட்டனர். படம்: தமிழக ஊடகம்

