இன்று சட்டமன்றம்; தினகரன் நுழைகிறார்

1 mins read
b0c3efa8-161a-4ed8-b4a2-efc70bcd51f4
-

சென்னை: தமிழக சட்டசபையின் இந்த ஆண்டின் முதல் கூட்டத் தொடர் இன்று தொடங்குகிறது. ஆர்கே நகரில் எம்எல்ஏவாக தேர்ந்து எடுக்கப்பட்ட டிடிவி தினகரன் முதன் முதலாக சட்ட மன்றத்துக்கு இன்று செல்வார் என்பதாலும் இது அவருக்கு முதல் சட்டசபைக் கூட்டம் என்ப தாலும் பரபரப்பு கூடி இருக்கிறது. இன்றைய கூட்டத்தை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தனது உரையின் மூலம் தொடங்கி வைப்பார்.

அரசின் கொள்கைகள், செயல்திட்டங்களை எடுத்துரைப் பதாக ஆளுநர் உரை இருப்பது வழக்கம். ஆனால் இப்போதைய ஆளுநர் தமிழகம் முழுவதும் மாவட்ட வாரியாக ஆய்வு மேற்கொண்டு அதிகாரிகளையும் பொதுமக்களை யும் சந்தித்துவருவதால் அரசின் விவரங்கள் அடிப்படையில் ஆளு நர் உரையாற்றுவாரா அல்லது அவர் மேற்கொண்ட ஆய்வுகளின் அடிப்படையில் உரையாற்றுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஜனவரி 13ஆம் தேதி வரை இந்த கூட்டத்தொடர் நடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆர்கே நகர் எம்எல்ஏவான தினகரன் ஆதரவாளர்களான 18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் செய் யப்பட்டு உள்ள நிலையில், தனி ஆளாக சட்டசபையில் தினகரன் நுழைகிறார். தினகரனுக்கு ஆதர வளித்துவரும் எம்எல்ஏக்கள் கலைச்செல்வன், ரத்தினசபாபதி ஆகியோர் தகுதி நீக்கம் செய்யப் படவில்லை.

தினகரன். கோப்புப்படம்