தமிழக சட்டமன்றம்: திமுக, காங்கிரஸ் வெளிநடப்பு

தமிழக சட்டமன்றம்: திமுக, காங்கிரஸ் வெளிநடப்பு

1 mins read

தமிழக சட்டமன்றம் இவ்வாண்டில் முதல்முறையாக நேற்று கூடிய நிலையில் வழக்கம்போல எதிர்க் கட்சிகள் வெளிநடப்பு செய்தன. தமிழக ஆளுநராக பன்வாரி லால் புரோகித் பொறுப்பேற்றபிறகு சட்டமன்றம் கூடியது இதுவே முதல்முறை. அதுபோல, ஆர்கே நகர் இடைத் தேர்தலில் சுயேச்சையாகப் போட்டி யிட்டு வென்ற டிடிவி தினகரன் சட்டமன்றக் கூட்டத்தொடரில் பங்கேற்பதும் இதுவே முதல்முறை. தினகரன் ஆதரவு எம்எல்ஏக் கள் 18 பேரும் தகுதிநீக்கம் செய் யப்பட்டுள்ளதால் அவர்கள் சட்ட மன்றக் கூட்டத்தொடரில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படவில்லை. 'அனைவருக்கும் வணக்கம். புத்தாண்டு வாழ்த்துகள்' எனத் தமிழில் தமது உரையைத் தொடங்கினார் ஆளுநர். அதைத் தொடர்ந்து, ஆளுநரின் உரைக்கு எதிர்ப்புத் தெரிவித்து திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் அக்கட்சி உறுப்பினர்களும் கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் உறுப்பினர் களும் அவையிலிருந்து வெளி நடப்பு செய்தனர்.