நூறாயிரம் போக்குவரத்து ஊழியர் மீது நடவடிக்கை

நூறாயிரம் போக்குவரத்து ஊழியர் மீது நடவடிக்கை

1 mins read
cb95f923-04d2-4553-89f3-f90f41b7d121
-

சென்னை: சம்பள உயர்வு, நிலுவைத் தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்துத் தொழிலாளர்கள் நேற்று ஐந்தாவது நாளாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இருப்பினும் அதிக பாதிப் பில்லை என்றும் பல்வேறு மாவட் டங்களில் சராசரியாக 40 விழுக் காட்டுக்கும் மேலான பேருந்துகள் ஓடுவதாகவும் அரசின் சார்பில் அறிவிக்கப்பட்டது. அரசு பேருந்து ஊழியர்கள் பிரச்சினை தொடர்பான வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது போராட்டத்திற்கு விதித்திருந்த தடையை நீக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது. ஊழியர்கள் அனைவரும் உடனே பணிக்கு திரும்ப வேண்டும் என நேற்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது. விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பிய பின்னரே ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தமிழக அரசுக்கு நீதி மன்றம் உத்தரவிட்டது.

தலைக்கவசத்துடன் ஓட்டுநர் சிவக்குமார். படம்: தமிழக ஊடகம்