பாக்யராஜ்: இன்னும் ஒரு மாதத்தில் நானும் அரசியலுக்கு வருகிறேன்

பாக்யராஜ்: இன்னும் ஒரு மாதத்தில் நானும் அரசியலுக்கு வருகிறேன்

1 mins read
e936c32f-cf5e-487b-8fa0-19a6feca1ec9
-

மதுரை: அரசியலுக்கு வரப் போவதாக நடிகரும் இயக்கு நருமான கே.பாக்யராஜ் (படம்) தெரிவித்துள்ளார். நேற்று முன் தினம் தமது 65வது பிறந்த நாளில் அவர் இதனை அறி வித்தார். மதுரையில் செய்தி யாளர்களிடம் பேசிய அவர், "நேரடி அரசியல் குறித்து முடிவு எடுக்கும் வாய்ப்பு வந்துவிட்டது என்றே நினைக் கிறேன். அதற்கான காலம், நீண்டகாலம் என்றெல்லாம் நினைக்க வேண்டாம். இன்னும் ஒரு மாதத்திற்குள் முடிவைச் சொல்லுவேன். யாருக்கு ஆதரவு, ஏன் ஆதரவு என்றெல்லாம் அப்போது தெரியும். கொஞ்சம் பொறுத் திருங்கள்," என்று தெரிவித்தார். எம்ஜிஆர் மறைவுக்குப் பிறகு 'எம்ஜிஆர் மக்கள் முன்னேற்றக் கழகம்' என்ற கட்சியை 1989ஆம் ஆண்டு பாக்யராஜ் தொடங்கினார். 1991ஆம் ஆண்டு கேரளாவில் நடந்த சட்டசபைத் தேர்தலில் போட்டியிட்ட அக்கட்சியின் வேட்பாளர் 87 வாக்குகளைப் பெற்றார்.