கோவை: எட்டுப் பெண்களைத் திருமணம் செய்து கோடிக்கணக் கில் மோசடி செய்த தொழிலதிபரை போலிசார் தேடி வருகின்றனர். கோவை வெள்ளலூரைச் சேர்ந்த புருஷோத்தமன், 57, என் பவர் காந்திபுரத்தில் லாரி போக்கு வரத்து நிறுவனம் நடத்தி வந்தார். அப்பகுதியிலுள்ள திருமணத் தகவல் மையத்தில் இரண்டாவது திருமணத்துக்காக அவர் பதிவு செய்திருந்தார். கோவை பாப்ப நாயக்கன் பாளையத்தைச் சேர்ந்த குமுதவல்லி என்பவரும் அந்தத் தகவல் மையத்தில் பதிவு செய்தி ருந்தார். இந்நிலையில், திருமணத் தகவல் மையம் ஏற்பாட்டின்பேரில் புருஷோத்தமனுக்கும் குமுத வல்லிக்கும் கடந்த ஆகஸ்ட் மாதம் திருமணம் நடைபெற்றது. திருமணமான சில நாளில் மாம னாரின் அனைத்து சொத்துகளை யும் விற்றுப் பணம் தருமாறு புரு ஷோத்தமன் வற்புறுத்தியுள்ளார்.
இதனால் சந்தேகமடைந்த குமுத வல்லி குடும்பத்தினர், அவரைப் பற்றி விசாரித்தபோது அவருக்கு வேறு பல பெண்களுடன் திரு மணம் நடைபெற்றது தெரியவந் தது. இதுகுறித்து குமுதவல்லியின் பெற்றோர் சென்னை உயர் நீதி மன்றத்தில் மனுத்தாக்கல் செய் தனர். இம்மனு மீது விசாரணை நடத்த போத்தனூர் போலிசாருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந் தது. இந்த உத்தரவின்பேரில், மோசடி, கூட்டுச் சதி உள்ளிட்ட 5 பிரிவுகளில் புருஷோத்தமன் மீது போத்தனூர் போலிசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்தபோது குமுதவல்லியிடம் ரூ.3 கோடியும் சென்னையைச் சேர்ந்த கல்லூரி பேராசிரியை ஒருவரிடம் ரூ.1.5 கோடியும் வாங்கி மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.
புருஷோத்தமன். படம்: ஊடகம்