பெங்களூரு: பெங்களூருவில் உள்ள உணவகத்துடன் கூடிய மதுபான விடுதியில் நேற்று அதி காலை மூண்ட தீயில் ஐந்து ஊழி யர்கள் கருகி மாண்டனர். ஐவரும் அங்கு வேலை பார்த்த ஊழியர்கள் என்றும் அவர்கள் உறங்கிக்கொண்டிருந்தபோது தீ விபத்தில் சிக்கிக்கொண்டனர் என்றும் தகவல்கள் தெரிவிக் கின்றன. பெங்களூரு நகரின் மத்தியில் பரபரப்பான காய்கறி சந்தைக்கு அருகில் உள்ள கும்பாரா சங்கா கட்டடத்தின் தரைத் தளத்தில் உள்ள கைலாஷ் மதுபான, உண வகத்தில் தீ விபத்து ஏற்பட்டது. தகவல் கிடைத்து அங்கு வந்த தீ அணைப்பாளர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடு பட்டனர். ஆனால் அதிவேகத்தில் தீ பரவியதில் உறங்கிக் கொண் டிருந்த ஐந்து ஊழியர்களும் சிக்கிக்கொண்டனர். இதற்கிடையே மூன்று மணி நேரம் போராடி தீ அணைப்பாளர்கள் தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
மதுபான விடுதியில் தீ விபத்து; ஐவர் கருகி மரணம்
1 mins read
-

