திருச்சியில் 'கொள்ளையர் நகரம்'

திருச்சியில் 'கொள்ளையர் நகரம்'

1 mins read

திருச்சி: 'தீரன் அதிகாரம் ஒன்று' திரைப்படத்தில் காட்டப் படுவதைப் போல் தமிழகத்தில் உள்ள ஒரு பகுதியில் பெரும் பாலானோர் கொள்ளையர்களாக உள்ளனர். போதுமான சாட்சிகள் இல்லாததால் அவர்களைப் போலி சாரால் கைதுசெய்ய முடியவில்லை திருச்சி அருகே உள்ள ராம்ஜி நகரில் வசிக்கும் 'கேப்மாரிஸ்' என்ற இனத்தைச் சேர்ந்தவர் களுக்கு திருடுவதுதான் குலத் தொழில். ஆந்திராவைப் பூர்வீக மாகக் கொண்ட இவர்கள் சுதந் திரத்துக்கு முன், கரூர் அருகே தங்கியிருந்தனர். எனினும் இவர்களது திருட்டுத் தொல்லை தாங்காமல், அங்குள்ள கிராமத் தினர் இவர்களை விரட்டி அடித் துள்ளனர்.

அப்போதையை திருச்சி மாவட்ட ஆட்சியர், இந்த மக்க ளுக்கு திருச்சியில் உள்ள ராம்ஜி ஆலையில் வேலை வாங்கிக் கொடுத்து தங்கவும் இடமளித் துள்ளார். அப்படித்தான் ராம்ஜி நகர் உருவானது. முன்பு பர்மா, மலேசியாவுக்குச் சென்றும் கொள்ளையடித்து வந் துள்ளனர் கேப்மாரிஸ். திருடப் போவதற்கு முன், சொந்தக் கிரா மத்தில் உள்ள கடவுளுக்கு சிறப்பு பூசை செய்பவர்கள். கொள்ளைய டித்த பிறகு முக்கடலும் சங்கமிக் கும் இடத்தில் கால்களைக் கழுவி, தங்கள் பாவங்களைப் போக்கிக்கொள்வார்களாம். ராம்ஜி நகரில் இருந்து ஒரே சமயத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கொள்ளையடிக்க கிளம்பிச் செல்வது வழக்கமாக உள்ளது.