பொங்கல் பண்டிகை நெருங்கி வரும் நிலையில், அது தொடர்பான கொண்டாட்டங்கள் இப்போதே தொடங்கிவிட்டன. அந்த வகையில் சென்னையில் உள்ள மகளிர் கல்லூரியில் நேற்று முன்தினம் பொங்கல் விழா நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட மாணவிகள் பல குழுக்களாகப் பிரிந்து, கல்லூரி வளாகத்திலேயே பொங்கல் சமைத்து குதூகலித்தனர். மேலும், மாட்டு வண்டியில் ஏறி கல்லூரித் திடலில் வலம் வந்தனர். தற்போது பல கல்லூரிகளிலும் பொங்கல் விழா கொண்டாடுவது வழக்கமாகி உள்ளது. படம்: ஏஎஃப்பி
கல்லூரி வளாகத்தில் களைகட்டிய பொங்கல் விழா
1 mins read
-

