அட்டைகளாக உருமாறும் செல்லாத ரூபாய் நோட்டுகள்

அட்டைகளாக உருமாறும் செல்லாத ரூபாய் நோட்டுகள்

1 mins read
bdb0ff4d-d188-446b-8616-1071f4e872d1
-

இந்திய அரசாங்கத்தால் செல் லாது என்று அறிவிக்கப்பட்ட 500 ரூபாய், 1000 ரூபாய் நோட் டுகளைப் பயன்படுத்தி கோப்பு அட்டைகள் (ஃபைல் பேட்) தயா ரிக்கும் பணி சென்னை அருகே புழல் சிறைச்சாலையில் நடை பெற்று வருகிறது. மத்திய ரிசர்வ் வங்கி 9,000 கிலோ எடையுள்ள செல்லாத நோட்டுகளை புழல் சிறைக்கு அனுப்பியுள்ளது. இவற்றில் கிழிந்து, சிதைந்த ரூபாய் நோட்டுகளும் அடங்கும். செல்லாத நோட்டுகள் மட்டும் 1,500 கிலோ இச்சிறைச்சாலைக்கு வந்துள்ளது என்று தமிழக சிறைத்துறை உயர் அதிகாரி ஏ.முருகேசன் தெரிவித்தார்.

இந்த ரூபாய் நோட்டுகள் சிறைக் கைதிகள் மூலம் துண்டு துண்டாக வெட்டப்பட்டு, பெரிய தொட்டியில் போட்டு அரைத்து கூழாக்கப்படுகின்றன. பின்னர் அந்தக் கூழில் இருந்து கோப்பு அட்டைகளை அவர்கள் தயாரிக் கிறார்கள். நாள்தோறும் சுமார் ஆயிரம் அட்டைகள் செல்லாத ரூபாய் நோட்டுகள் மூலம் தயாரிக் கப்படுவதாக அந்த அதிகாரி குறிப்பிட்டார். இதற்காக 25 முதல் 30 வரை யிலான ஆயுள் தண்டனைக் கைதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு சிறப்புப் பயிற்சி அளிக்கப்படுவதாகவும் செய்தி யாளர்களிடம் திரு முருகேசன் கூறினார்.

கட்டி கட்டியாக அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் இவை அத்தனையும் செல்லாத ரூபாய் நோட்டுகளால் உருவானவை. படம்: ஊடகம்