போபால்: வார்டில் அடிப்படை வசதிகூட செய்யப்படாததால் உள்ளாட்சித் தேர்தலில் வாக்கு சேகரிக்க வந்த பாரதிய ஜனதா கட்சி வேட்பாளருக்கு முதியவர் ஒருவர் செருப்பு மாலை அணி வித்து வரவேற்றார். இதன் தொடர்பிலான காணொளிக் காட்சி தற்போது சமூக ஊடகங்களில் அதி வேகத்தில் பரவி வருகிறது. மத்தியப் பிரதேசத்தில் காலி யாக உள்ள மாநகராட்சி, நக ராட்சி, பஞ்சாயத்துக்களுக்கு இம்மாதம் 17ஆம் தேதி தேர்தல் நடக்கிறது. இதில் தஹர் மாவட்டம் தாமோத் பகுதியில் பாஜக வேட் பாளராகப் போட்டியிடும் தினேஷ் சர்மா என்பவர் கடந்த ஞாயிறு அன்று தனது ஆதரவாளர் ளு டன் வீடு வீடாக பிரசாரம் செய்தார்.
அப்போது சிலர் அவருக்கு மாலை அணிவித் தனர். அப்போது அங்கு வந்த முதியவர் ஒருவர் அருகே கம்பியில் மாட்டியிருந்த செருப்பு மாலையை எடுத்து வேட்பாளர் தினேஷ் ஷர்மாவின் கழுத்தில் போட முயன்றார். முதலில் சுதாரித்த தினேஷ் ஷர்மா பொது இடத்தில் பிரசாரம் செய்ய வந்ததால் என்ன செய்வ தென்று புரியாமல் செருப்பு மாலையை வாங்கி தானே கழுத்தில் போட்டுக்கொண்டார்.
காணொளியிலிருந்து எடுக்கப்பட்ட படத்தில் வேட்பாளருக்கு செருப்பு மாலை அணிவிக்கும் முதியவர். படம்: இந்திய ஊடகம்

