சென்னை: ஒவ்வோர் ஆண்டும் பலத்த வரவேற்பைப் பெற்று வரும் சென்னை புத்தகக் காட்சி நேற்று தொடங்கியது. வரும் 22ஆம் தேதி வரை நடைபெற உள்ள இக் கண்காட்சிக்கு லட்சக்கணக்கா னோர் வருகை புரிவர் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டு மொத்தம் 708 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ள தாகவும், அவற்றில் 10 லட்சம் புத்தகங்கள் காட்சிக்கும் விற்ப னைக்கும் வைக்கப்பட்டுள்ளதாக வும் தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்தின் (பபாசி) தலைவர் வயிரவன், செயலர் ஏ.ஆர்.வெங்க டாசலம், பொருளாளர் டி.எஸ். சீனிவாசன் ஆகியோர் தெரிவித் துள்ளனர்.
பபாசி அமைப்பு கடந்த 40 ஆண்டுகளாக சென்னையில் பிரம்மாண்டமான புத்தகக் காட் சியை நடத்தி வருகிறது. இந்தாண்டு 41ஆவது புத்தகக் காட்சி நேற்று தொடங்கியது. "இம்முறை சுமார் 1.60 லட்சம் சதுர அடி பரப்பளவில் புத்தகக் காட்சி நடைபெறுகிறது. வார நாட்களில் பிற்பகல் 2 மணி முதல் இரவு 9 மணி வரையிலும், விடு முறை நாட்களில் காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் புத்தகக் காட்சி நடைபெறும். "இங்கு புத்தகங்களுக்கு 10 விழுக்காடு கழிவு வழங்கப்படும். நுழைவுக் கட்டணம் பத்து ரூபாய். "புத்தகக் காட்சி நடைபெறும் அனைத்து நாட்களிலும் பல்வேறு துறை நிபுணர்கள் பங்கேற்கும் சொற்பொழிவுகள், மாணவர்களுக் கான போட்டிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வாசகர்கள், எழுத்தாளர்கள் சந்திப்புக்காக தனி அரங்கு ஒதுக்கப்பட்டுள்ளது," என்று வயிரவன் தெரிவித்துள்ளார்.
சென்னை புத்தகக் கண்காட்சி. கோப்புப்படம்