நீடிக்கும் வேலை நிறுத்தம்: அரசுக்கு ரூ.100 கோடி இழப்பு

நீடிக்கும் வேலை நிறுத்தம்: அரசுக்கு ரூ.100 கோடி இழப்பு

1 mins read
c19e42db-8773-4b21-beb6-8c0ccab12ad7
-

சென்னை: கடந்த ஒரு வாரமாக நீடித்து வரும் அரசுப் போக்கு வரத்துக் கழக ஊழியர்களின் போராட்டத்தால் தமிழக அரசுக்கு இதுவரை 100 கோடி ரூபாய் அளவுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ள தாகத் தகவல்கள் தெரிவிக் கின்றன. போராட்டத்தை தோல்வி அடையச் செய்யும் முனைப்பில் தமிழக அரசு தற்காலிக ஓட்டுநர் களை வைத்துப் பேருந்துகளை இயக்கி வருகிறது. ஆனால் இந்த ஓட்டுநர்களால் ஏற்பட்ட விபத்துகளில் சிக்கி 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஊதிய உயர்வு, ஓய்வூதிய நிலுவைத் தொகையை வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தி அரசுப் போக்குவரத்து தொழிற்சங்கங்கள் கடந்த 4ஆம் தேதி முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட் டுள்ளன. உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும் தொழிலாளர்கள் தங்கள் போராட் டத்தைக் கைவிடவில்லை. நேற் றும் ஏழாவது நாளாக போராட்டம் நடைபெற்றது. இதனால் பெரும் பாலான பேருந்துகளை இயக்க முடியவில்லை. பொதுமக்கள் ஆட்டோக்கள், தனியார் வாகனங் களைப் பயன்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

சென்னையில் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்கள். படம்: சதீஷ்