சென்னை: முதல்வர் பழனிசாமி தலைமையிலான ஆட்சி வீட்டுக்குப் போக வேண்டிய ஆட்சி என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் நடப்பது அறுதிப் பெரும்பான்மை இல்லாத ஆட்சி என்றும், எப்போது வேண்டுமானாலும் கவிழும் என்றும் அவர் கூறியுள்ளார். "சட்டப்பேரவையில் திமுக பக்கம் எனக்கு இருக்கை ஒதுக்கிவிட்டு அவர்களோடு பேசாதே, இவர்களோடு பேசாதே என்று சொல்ல அதிமுகவினருக்கு என்ன தகுதி இருக்கிறது. நான் எல்லோருக்கும் நண்பன். அனைவரும் என்னிடம் பழகுவார்கள். அமைச்சர் ஒருவர் கூட யாரும் பார்க்காத நேரம் என்னைப் பார்த்துக் கும்பிட்டார்," என்றார் தினகரன்.
இது வீட்டுக்குப் போகவேண்டிய ஆட்சி: தினகரன் திட்டவட்டம்
1 mins read
-

