பீட்டா: ஜல்லிக்கட்டுக்காக காளைகளை துன்புறுத்தக் கூடாது

பீட்டா: ஜல்லிக்கட்டுக்காக காளைகளை துன்புறுத்தக் கூடாது

1 mins read

சென்னை: ஜல்லிக்கட்டு நடத்துவது தொடர்பாக தமிழக அரசுக்கு விலங்குகள் நல அமைப்பான பீட்டா கடிதம் அனுப்பியுள்ளது. தமிழக அரசின் தலைமைச் செயலர், காவல்துறைத் தலைவருக்கு இந்தக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. "விலங்குகள் நலவாரியம் திருத்தியமைத்த நெறிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும். காளைகளைத் துன்புறுத்தாமல் ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்த வேண்டும்," என பீட்டா நிர்வாகம் அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது.