சென்னை: ஆய்வு மேற்கொள்ளும் பொருட்டு தமிழகத்தில் ஆளுநர் சுற்றுப்பயணம் மேற்கொள்வது மிகவும் கண்டிக்கதக்கது என தமிழக காங்கிரஸ் தலைவர் திரு நாவுக்கரசர் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்க ளிடம் பேசிய அவர், ஆளுநரின் செயல்பாடானது மாநில அரசின் உரிமைகளைப் பறிக்கும் வகையில் உள்ளது எனச் சாடினார். ஆளுநரின் ஆய்வு நடவடிக் கையைத் தமிழக அரசும் அமைச் சர்களும் கண்டுகொள்ளாமல் இருப்பது அவர்களின் அடிமைத் தனத்தை உணர்த்துவதாகக் குறிப்பிட்ட அவர், தமிழக அரசு போக்குவரத்து தொழிலாளர்க ளுடன் பேச்சுவார்த்தை நடத்தி ஊழியர்களின் வேலை நிறுத் தத்தை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என வலியுறுத்தினார். "பயிற்சி இல்லாத ஓட்டுநர் களைக் கொண்டு பேருந்துகளை இயக்குவது மிகவும் கண்டனத் திற்கு உரியது.
கஷ்டப்படும் ஓட்டுநர்களுக்கு ஊதியம் வழங்காமல், வசதியாக இருக்கும் எம்எல்ஏக்களுக்கு ஊதிய உயர்வு வழங்குவது கண்டிக்கத்தக்கது. "நீதிமன்ற தீர்ப்பைக் காட்டி அரசாங்கம் இந்தப் பிரச்சினையை மீண்டும் சிக்கல் ஆக்கக்கூடாது. அரசுப் போக்குவரத்து தொழி லாளர்களின் கோரிக்கைகளை அரசு பரிசீலிக்க வேண்டும்," என்றார் திருநாவுக்கரசர். முத்தலாக் மசோதாவை மாநிலங்களைவையில் நிறைவேற்ற விடாமல் காங்கிரஸ் கட்சி கண்டிப்பாக எதிர்க்கும் என்று குறிப்பிட்ட அவர், தமிழகத்தில் திமுகவுடனான கூட்டணி தொடரும் என திட்டவட்டமாகத் தெரிவித்தார். முன்னதாக பல்வேறு கட்சிக ளில் இருந்து விலகிய இரு நூறுக்கும் மேற்பட்டோர் காங் கிரஸ் கட்சியில் இணையும் விழா திருநாவுக்கரசர் தலைமையில் நடந்தது. கட்சியில் இணைந்தவர்கள் மத்தியில் பேசிய அவர், தமிழகத் தில் காங்கிரஸ் கட்சி தொடர்ந்து பலம் பெற்று வருவதாகத் தெரிவித்தார்.

