சென்னை: ஆர்கே நகர் இடைத் தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து 'தீந்தமிழன் தினகரன் பேரவை' என்ற புதிய அமைப்பு உதயமாகி உள்ளதாக டிடிவி தினகரன் வட்டாரத் தகவல்கள் தெரிவிக் கின்றன. அந்த அமைப்புக்கான உறுப் பினர் சேர்க்கைப் பணிகள் தீவிர மடைந்து இருப்பதாக அவரது ஆதரவாளர்கள் கூறுகின்றனர். எதிர்வரும் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுவது, அதன் மூலம் அதிமுகவுக்கு கடும் நெருக்கடி ஏற்படுத்துவதே தினகர னின் திட்டம் என வெளியாகியுள்ள தகவலால் அதிமுக தலைமை கவலையில் இருப்பதாக தமிழக ஊடகங்கள் தெரிவிக்கின்றன. தனது பெயரில் செயல்படும் பேரவையில் தனக்கு மிகவும் நெருக்கமாக உள்ள தங்க தமிழ்ச் செல்வன், வெற்றிவேல் உள்ளிட் டோரை சில முக்கிய பொறுப்புகளில் நியமிக்க தினகரன் முடிவு செய்தி ருப்பதாகக் கூறப்படுகிறது.
தினகரன். படம்: இணையம்

