வட மாநிலங்களில் கடும் குளிரால் 143 பேர் பலி

1 mins read

லக்னோ: வட மாநிலங்களில் குளிர் பருவநிலை நேற்றும் தொடர்ந்து வாட்டியது. வட மாநிலங்களை நடுங்க வைத்துள்ள கடும் குளிர், பனிமூட்டத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 143 ஆக அதிகரித்துள்ளது. உத்தரப்பிரதேச மாநிலத்தில் தொடர்ந்து நிலவும் கடும் குளிர் காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 40 பேர் உயிரிழந் துள்ளனர். இவர்களையும் சேர்த்து வட மாநிலங்களில் இறந்தவர் களின் எண்ணிக்கை 143 ஆக அதிகரித்துள்ளது.

வட மாநிலங்களின் பல பகுதி களிலும் கடும் பனிமூட்டத்தால் பாதைகள் எதுவும் தெளிவாகத் தெரியவில்லை. இதன் காரணமாக கிட்டத்தட்ட 22 ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. 9 ரயில்களின் பயண நேரம் மாற்றி அமைக்கப் பட்டது. 30 ரயில்கள் தாமதத் துடன் நேற்று இயக்கப்பட்டன. உத்தரப்பிரதேச மாநிலம், பார பங்கியில் உள்ள பள்ளிக்கு படிக்கச் சென்றிருந்த 6 வயது சத்யம் என்ற சிறுவன் குளிரால் நடுங்கி உயிரிழந்ததாக தகவல்கள் குறிப்பிட்டுள்ளன. கான்பூர், பதேபூர், கண்ணோஜ், பிலிபிட், மொரதாபாத், சம்பால், அம்ரோகா, ராம்பூர், ஹமீர்பூர், அசாம்ஹார்க், காஜிபூர், பாலியா ஆகிய இடங்களில் வசித்து வந்தவர்கள் கடும் குளிர் தாக்கத் தின் காரணமாக உயிரிழந்துள்ள தாக ஊடகங்கள் தகவல் வெளி யிட்டுள்ளன.