ஆந்திர முதல்வரின் பேச்சைக் கிண்டல் செய்து போராட்டம்

ஆந்திர முதல்வரின் பேச்சைக் கிண்டல் செய்து போராட்டம்

1 mins read

ஸ்ரீகாளஹஸ்தி: "பாபு வந்தால் ஜாப் (வேலை) வரும்," என்ற சந்திரபாபு நாயுடுவின் பேச்சை கிண்டல் செய்து நடிகை ரோஜா எம்எல்ஏ தன்னுடைய காதுகளில் பூவை வைத்துக் கொண்டு புத்தூரில் நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டார். ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபுநாயுடு, மாநிலம் முழுவதும் நடக்கும் சில விழாக்கள், கூட்டங்களில் பங்கேற்றுப் பேசும்போது, "பாபு வந்தால் ஜாப் (வேலை)" வரும் எனப் பேசி வருகிறார். சந்திரபாபுவின் இந்தப் பேச்சில் உண்மை இல்லை என்றும் அவர் இளைஞர் களை ஏமாற்றுவதற்காகவே இதுபோல் பேசி வருகிறார் என்றும் வேலையில்லா இளைஞர்களுக்கு ஒவ்வொரு மாதமும் உதவித்தொகையாக ரூ.2,000 வழங்குவதாக அவர் தெரிவித்தார். ஆனால் இது வரை வழங்கப்படவில்லை என்றும் கூறி ரோஜா தனது ஆதரவாளர்களுடன் நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டார்.