உயர் கல்வித் தகுதிகளைக் கொண்டுள்ள சிலர் தமிழக சட்ட மன்ற உறுப்பினர்களாகத் தேர்ந் தெடுக்கப்பட்டுள்ளதால் விவாத மொழியாக தமிழுடன் ஆங்கிலமும் இணைந்துள்ளது. அண்மைய சட்டமன்றக் கூட்டத் தொடரில் முன்னாள் சபாநாயகர் பிடிஆர் பழனிவேல்ராஜனின் மகனும் மதுரை மத்திய தொகுதி திமுக எம்எல்ஏவுமான தியாக ராஜன், ஆளுநர் உரை குறித்து பேசியபோது தமிழிலேயே தொடங் கினார். ஆனால், தமிழில் பேச சற்று தடுமாறிய அவர், சிறிது நேரத்தில் ஆங்கிலத்துக்குத் தாவினார். அதைத் தொடர்ந்து, தமிழ் ஆட்சி மொழி, பண்பாட்டுத் துறை அமைச் சரான மாஃபா பாண்டியராஜனும் ஆங்கிலத்திலேயே அவருக்குப் பதிலளித்தார். தியாகராஜன் ஆங்கிலத்திற்கு மாறியதும் அவர் பேச்சைத் தொடர ஊக்கமளிக்கும் வகையில் சபா நாயகர் தனபால் அவருக்கு 20 நிமிடங்கள் ஒதுக்கினார்.
சட்டமன்ற உறுப்பினராவதற்கு முன் தியாகராஜன் அமெரிக்காவில் 'லீமன் பிரதர்ஸ்' நிறுவனத்தில் வெளிநாட்டுச் செயல்பாடுகளுக் கான தலைவராகப் பணியாற் றினார். அரசின் நிலைப்பாட்டை ஆதரித்து அவருக்குப் பதிலளித்த அமைச்சர் பாண்டியராஜன், இந்தி யாவின் முதன்மை மனிதவள ஆலோ சனை நிறுவனங்களில் ஒன்றான 'மாஃபா'வின் முன்னாள் தலைவர் என்பது குறிப்பிடத் தக்கது.
தியாகராஜனும் பாண்டியராஜ னும் ஆங்கிலத்தில் விவாதிக்க, மற்ற உறுப்பினர்கள் அனைவரும் இடை யூறு இல்லாமல் அமைதியாக கேட்டுக்கொண்டிருந்தனர். ஒரு கட்டத்தில் மற்ற உறுப்பினர்களும் விவாதத்தில் பங்கேற் றதால், பேச வாய்ப்பளித்த சபாநாயகருக்கு தியாகராஜன் நன்றிகூற முடியா மல் அமர வேண்டியதாகிவிட்டது.

