மோசடி செய்த ஆடவருக்கு எட்டு மாத சிறை

மோசடி செய்த ஆடவருக்கு எட்டு மாத சிறை

1 mins read

நிறுவனத்திற்குச் சேரவேண்டிய $17,100 தொகையைத் தன் பையில் போட்டுக்கொண்ட ஆடவர் ஒருவருக்கு எட்டு மாத சிறைத் தண்டனை விதிக்கப் பட்டது. கருப்பையா செல்வகுமார், 62, என்ற அந்த ஆடவர் நம்பிக்கை மோசடியில் ஈடுபட்ட குற்றத்தை ஒப்புக்கொண்டார். கடந்த ஆண்டு ஏப்ரல் 17ஆம் தேதிக்கும் மே 9ஆம் தேதிக்கும் இடையில் செய் யப்பட்ட ஈமச்சடங்கு சேவைகளுக்காக $17,100 தொகை இந்து காஸ்கட் நிறுவனத்திற்குச் சேர வேண்டியிருந்தது.

அப்பணத்தை கருப்பையா செல்வகுமார் தவ றாகக் கையாண்டுவிட்டார். இந்து காஸ்கட் நிறுவனம், லாவண்டர் ஸ்திரீட்டில் உள்ள 'டைரக்ட் ஃபியூனரல் சர்வீசஸ்' நிறுவனத்தின் துணை நிறுவன மாகும். வாடிக்கையாளர்கள் கேட்டுக் கொண்டபடி கருப்பையா ஈமச் சடங்குகளை நடத்தித் தருவார். அதற்காக வாடிக்கையாளர்கள் ரொக்கமாக அல்லது காசோலை யாக அவரிடம் பணம் தருவர். கருப்பையா அதைப் பெற்றுக் கொண்டு அவர்களுக்குக் கட் டண ரசீது ஒன்றைத் தருவார். பணத்தை நிறுவனத்திடம் ஒப்ப டைத்துவிடுவார். இந்த வகையில் சென்ற ஆண்டு ஏப்ரல் 17ஆம் தேதிக்கும் மே 9ஆம் தேதிக்கும் இடையில் நான்கு முறை அவரி டத்தில் மொத்தம் $17,100 கொடுக்கப்பட்டது.