இந்திய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மீது நான்கு நீதிபதிகள் புகார்

இந்திய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மீது நான்கு நீதிபதிகள் புகார்

2 mins read
7f476089-1dbd-4452-975a-a75b9d01978b
-

இந்திய உச்ச நீதிமன்ற நீதிபதி கள் நால்வர், தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா ஒருதலைப்பட்சமாகச் செயல்படுவதாகக் குறைகூறி இருப்பது நாடு முழுவதும் அதிர் வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்திய வரலாற்றில் இதுவரை இல்லாத ஒன்றாக திரு ரஞ்சன் கோகோய், திரு செல்லமேஸ்வர், திரு மதன் பி.லோகுர், திரு குரியன் ஜோசஃப் ஆகிய உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நால்வர் கூட்டாக நேற்று செய்தியாளர் களைச் சந்தித்தனர். இதனை இந்திய நீதித்துறை யில் ஓர் அசாதாரண நிகழ்வாகக் குறிப்பிட்ட அவர்கள், உச்ச நீதி மன்றத்தில் நிர்வாகம் சரியில்லை என்றும் கூறினர்.

"கடந்த சில மாதங்களாக உச்ச நீதிமன்றத்தில் விரும்பத் தகாத நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றன. நீதித்துறையில் நிலவும் பிரச்சினைகள் குறித்து சில மாதங்களுக்குமுன் தலைமை நீதிபதிக்குக் கடிதம் எழுதினோம். நீதித்துறையில் நிலவும் குளறு படிகள் குறித்து அவரிடம் முறை யிட்டோம். ஆனால் இதுவரை யிலும் எந்த நடவடிக்கையும் எடுக் கப்படவில்லை. உச்ச நீதிமன்றத் தைப் பாதுகாக்க நாங்கள் எடுத்த முயற்சி தோற்றுவிட்டது," என்று அந்நீதிபதிகள் தெரிவித்தனர். தங்களது கவலைகளை நாட்டு மக்களிடம் தெரிவிப்பதற்காக இந்தச் செய்தியாளர் சந்திப்பிற்கு ஏற்பாடு செய்ததாகக் குறிப்பிட்ட அவர்கள், நீதித்துறையைச் சரி செய்யாவிடில் ஜனநாயகம் சீர் கெட்டுவிடும் என்றும் எச்சரித்தனர். நீதித்துறையில் விதிகள் பின் பற்றப்படுவதில்லை என்ற அவர்கள், முக்கிய வழக்குகளை மூத்த நீதி பதிகளின் அமர்வுக்கு ஒதுக்காமல் தலைமை நீதிபதி தமக்கு வேண்டிய சில நீதிபதிகள் அடங்கிய அமர் வுக்கு ஒதுக்கீடு செய்வதாகவும் புகார் கூறினர்.

தலைமை நீதிபதியைப் பதவி நீக்கம் செய்யவேண்டும் என்று சொல்கிறீர்களா என்று கேட்ட தற்கு, "அதை நாடுதான் முடிவு செய்யவேண்டும்," என்று பதில் அளித்தனர்.