கார் தலைகீழாக குடை சாய்ந்தது; இருவர் காயம்

கார் தலைகீழாக குடை சாய்ந்தது; இருவர் காயம்

1 mins read

புக்கிட் பாத்தோக் அவென்யூ 3ல் வியாழக்கிழமை நிகழ்ந்த சாலை விபத்து ஒன்றில் இரண்டு பேர் காயம் அடைந்தனர். அந்த இருவரும் சென்ற கார், வேறொரு வாகனத்தில் மோதி குடைசாய்ந்துவிட்டது. விபத்து பற்றி தங்களுக்கு இரவு 10.45 மணிக்குத் தகவல் வந்ததாகவும் காயம் அடைந்தவர்கள் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டதாகவும் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது. காயம் அடைந்த இருவரும் சுயநினைவுடன் இருந்தார்கள் என தெரிய வந்ததாக சேனல் நியூஸ் ஆசியா நேற்று குறிப்பிட்டது. அந்த இருவரில் ஒருவரின் சகோதரி என்று தன்னைக் கூறிக்கொண்ட ஃபேஸ்புக் பயனீட்டாளர் ஒருவர், வெள்ளை நிற கார் ஒன்று சேதம் அடைந்திருந்ததைக் காட்டும் படத்தை ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றினார்.