புதுடெல்லி: நாடு முழுவதும் நடத்தப்பட்ட அதிரடிச் சோதனை களில் ரூ.3,500 கோடி ($730.45 மில்லியன்) பினாமி சொத்துகள் முடக்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. பண மதிப்பிழப்பு நடவடிக்கை யைத் தொடர்ந்து பலரும் சொத்துகளைப் பதுக்கும் நட வடிக்கையில் ஈடுபட்டனர். அதனை அடுத்து பினாமி சொத்துகள் தடுப்பு சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு நடவடிக் கைகள் எடுக்கப்பட்டன.
கறுப்புப் பணம், சட்டவிரோத பணப் பரிமாற்றங்கள், பினாமி சொத்துகள், வருமானவரி ஏய்ப்பு போன்றவற்றுக்கு எதிராக பல இடங்களில் அதிரடி சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. நாடு முழுவதும் பெருமளவில் வரி ஏய்ப்புகள் செய்யப்பட் டுள்ளதும் பினாமிகளின் பெயரில் சொத்துகள் இருப்பதும் கண்டு பிடிக்கப்பட்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. பினாமிகளின் பெயரில் சொத் துகளை வைத்து அனுபவிப்போர், பினாமியாகச் செயல்பட்டவர் என அந்தச் சொத்துடன் தொடர்புடைய அனைவருக்கும் ஏழு ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை வழங்க 'பினாமி சொத்துகள் தடுப்பு சட்டம்' வழிவகுத்தது.

