பெங்களூரு: பெங்களூரு சிறையில் நான்கு ஆண்டு சிறைத் தண்டனையை அனுபவித்து வரும் சசிகலா கன்னட மாணவராக மாறியுள்ளார். சிறையிலேயே அவர் கன்னட மொழி கற்று வருவதாகத் தக வல்கள் தெரிவிக்கின்றன. பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் நடைபெறும் பெரியோர் களுக்கான கல்வித் திட்டத்தில் மாணவராக சேர்ந்துள்ளார். அங்கு அவருக்கு கன்னட எழுத்துகளை வாசிக்கவும் உச்ச ரிக்கவும் பயிற்சி அளிக்கப்படு கிறது. கன்னட மொழியைத் தவிர கணினி ஆற்றலையும் சசிகலா மேம்படுத்தி வருகிறார். கன்னட மொழி வகுப்புகளில் சசிகலாவுக்குத் துணையாக இருப்பவர் அவருடன் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட இள வரசி. இருப்பினும் வகுப்பில் நடத்தப் பட்ட மதிப்பீட்டுத் தேர்வில் அவரை விட இளவரசியே சிறப்பாகச் செய் துள்ளார்.
ஆனால் இதை வைத்து சசிகலாவைக் குறைவாக மதிப்பிட முடியாது. இது ஒரு வாய் மொழித் தேர்வு. சசிகலா மௌனவிரதம் இருந்துவருவதால் அவர் சிறப் பாகச் செய்யாமல் போயிருக்கலாம் என்று கூறப்படுகிறது. "வாய் மொழித் தேர்வு கேள்வி களுக்கு சசிகலா பதில் அளிப்ப தில்லை. ஆனால் திறமையாக எழுதுகிறார்," என்று சிறைத் துறை தகவல்கள் தெரிவிக் கின்றன. கன்னட மொழி வகுப்பில் சேர்ந்து படிக்கும் சசிகலா, இள வரசி ஆகிய இருவருக்கும் சான்றிதழ் வழங்கப்படும் என்று சிறை அதிகாரிகள் கூறினர்.

