மும்பை கடலில் 40 பள்ளி மாணவர்களுடன் படகு கவிழ்ந்தது

மும்பை கடலில் 40 பள்ளி மாணவர்களுடன் படகு கவிழ்ந்தது

1 mins read
2eb415b9-4a4a-479f-be93-0ab92516dbd3
-

மும்பை: மும்பை பர்னாகா கடலில் 40 பள்ளி மாணவர்கள் பயணம் செய்த படகு மூழ்கியதில் குறைந் தது நான்கு குழந்தைகள் பலியா கினர். படகில் பயணம் செய்த மற்றவர்களைத் தேடும் பணியில் 32 மாணவர்கள் உயிருடன் மீட்கப் பட்டதாகவும் மற்றவர்கள் கதி தெரியவில்லை என்றும் மும்பை ஊடகங்கள் தெரிவித்தன. இந்த நிலையில் காணாமல் போன மாணவர்களைத் தேடும் பணி தீவிரமாக்கப்பட்டுள்ளது.

மும்பையின் தகானு கடற் கரைக்கு பள்ளியைச் சேர்ந்த 40 குழந்தைகள் படகில் சுற்றுலா சென்றனர். அப்போது கடலில் இருந்து 3.7 கி.மீட்டர் தூரத்தில் படகு கவிழ்ந்தது. குழந்தைகளைத் தேடும் பணி யில் ஏராளமான படகுகள் ஈடு பட்டுள்ள நிலையில் அங்கிருந்த பொதுமக்களும் தண்ணீரில் மிதக் கும் குழந்தைகளை மீட்டு கரை சேர்த்து வருகின்றனர். பள்ளி மாணவர்களைத் தேடு வதற்காக டோர்னியர் விமானம், ஹெலிகாப்டர்கள் வரவழைக்கப் பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. பள்ளி மாணவர்களின் பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என்று கூறப்படுகிறது.

பட விளக்கம்: பொதுமக்களில் பலர் கடலில் மிதந்த மாணவர்களை மீட்டு கரை சேர்த்தனர். படம்: ஊடகம்