புதுடெல்லி: டெல்லியில் உள்ள தாஜ் டிப்ளமேட்டிக் என்கிளேவ் ஹோட்டல் அறையில் 52 வயது அமெரிக்க மாதை மானபங்கப் படுத்தியதாக வெளிநாட்டு வாழ் இந்திய பொறியாளர் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள் ளனர். கடந்த திங்கட்கிழமை நடந்த சம்பவத்தில் பானத்தில் மயக்க மருந்தைக் கலந்து அரை மயக் கத்தில் இருந்தபோது பொறியாளர் தம்மை தடவியதாக அந்த மாது குற்றம் சாட்டியுள்ளார். இதையடுத்து சாணக்யபுரி போலிசார், பொறியாளர் மீது மான பங்க வழக்குப் பதிவு செய்துள் ளனர். இம்மாதம் ஜனவரி 6ஆம் தேதி அந்த மாது புதுடெல்லி வந்தார். இரண்டு நாள் கழித்து ஜனவரி 8ஆம் தேதி ஹோட்டல் நீச்சல் குளத்தில் ஆடவரை அவர் சந்தித் தார்.
அப்போது அந்த ஆடவர் மது பானம் அருந்த தமது அறைக்கு வருமாறு அழைப்பு விடுத்தார். இதை ஏற்றுக்கொண்ட மாது 8வது மாடியில் உள்ள ஆடவரின் அறைக்குச் சென்றார். பின்னர் மது பானம் அருந்திய போது தலைசுற்றல் ஏற்பட்டதாகவும் அப்போது ஆடவர் தம்மை பிடித்து இழுத்ததால் உதறிவிட்டு அறை யிலிருந்து வெளியே ஓடியதாகவும் புகாரில் மாது கூறியுள்ளார். இந்தச் சம்பவத்தால் மறுநாளே மாது அருகில் இருந்த குர்காவன் ஹோட்டலுக்கு இடம் மாறினார். பின்னர் ஜனவரி 10ஆம் தேதி என்கிளேவ் ஹோட்டலுக்குத் திரும்பிய அவர் அங்கு முறைப்படி காவல் அதிகாரிகளிடம் புகார் அளித்தார்.
உடனடியாக போலிசில் புகார் அளிக்க விரும்பவில்லை என்றும் பின்னர் நண்பரிடம் நடந்த சம் பவத்தை விவரித்தபோது மனதை மாற்றிக் கொண்டதாகவும் புகார் மனுவில் மாது தெரிவித்தார். இதற்கிடையே தாஜ் டிப்ள மேட்டிக் என்கிளேவ் ஹோட்டலின் பேச்சாளர் ஒருவர், இந்த விவகாரத் தில் போலிசாருக்கு அனைத்து ஒத்துழைப்புகளும் வழங்கப்படும் என்று உறுதியளித்தார். தற்போது தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள 25 வயது ஆடவர் கலி போர்னியாவில் உள்ள பிரபல நிறுவனம் ஒன்றில் மென்பொருள் பொறியாளராகப் பணியாற்றுகிறார் என்று இந்திய ஊடகத் தகவல்கள் தெரிவிக் கின்றன.

