பலாத்கார குற்றவாளிக்கு மரண தண்டனை

பலாத்கார குற்றவாளிக்கு மரண தண்டனை

1 mins read

நாக்பூர்: மாணவிகளைப் பாலியல் பலாத்காரம் செய்த பள்ளி காவலாளிக்கு வார்தா நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது. மகாராஷ்டிர மாநிலம் வார்தா மாவட்டம் பந்துர்ணா கிராமத்தில் உள்ள உறைவிடப் பள்ளிக் கூடத் தில் நூற்றுக்கணக்கான மாணவ, மாணவிகள் தங்கி படித்து வரு கின்றனர். இந்தப் பள்ளிக்கூடத்தில் ராஜ் குமார் என்பவர் காவலாளியாக பணிபுரிந்து வந்தார். கடந்த 2015ஆம் ஆண்டு ராஜ்குமார், சிறுமிகளைப் பாலியல் ரீதியாக தொல்லைப்படுத்தினார். மேலும் 2 சிறுமிகளைப் பலாத்காரமும் செய் தார். அவரால் பாதிக்கப்பட்ட சிறுமிகளில் ஒருவர் தனக்கு நேர்ந்த அவலத்தைப் பெற்றோரிடம் கூறினார். இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர் போலிசில் புகார் செய்தனர்.

இதனைத் தொடர்ந்து ராஜ் குமாரை காவல்துறையினர் கைது செய்தனர். அவருக்கு உடந்தையாக இருந்த மற்றொரு நபரும் சிக்கினார். இந்த வழக்கின் மீதான விசாரணை வார்தா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக் கில் நீதிபதி அஞ்சு ‌ஷிண்டே தீர்ப்பு அளித்தார். குற்றச்சாட்டு ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்ட தால் ராஜ்குமாரை குற்றவாளி என அறிவித்த நீதிபதி அவருக்கு மரண தண்டனை விதித்துத் தீர்ப்பு வழங்கினார். மேலும், அவருக்கு உடந்தை யாக இருந்த நபருக்கு 6 மாதம் கடுங்காவல் தண்டனை விதிக்கப் பட்டது. இதைத்தொடர்ந்து இரு வரும் சிறையில் அடைக்கப்பட்ட னர்.