புதுடெல்லி: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மீது மூத்த நீதிபதிகள் குற்றஞ்சாட்டியுள்ள நிலையில், தங்களுக்கிடையிலான பிரச்சினையை நீதிபதிகளே சரி செய்து கொள்ள வேண்டும் என்று முன்னாள் தலைமை நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணன் கூறினார். மூத்த நீதிபதிகளான செல்லமேஸ்வர், ரஞ்சன் கோகாய், குரியன் ஜோசப், மதன் பி லோகூர் ஆகிய நால்வரும் உச்சநீதிமன்றத் தில் நிர்வாகம் சரியாக நடைபெற வில்லை, ஜனநாயகம் இல்லை என நேற்று முன்தினம் கூட்டாக பேட்டியளித்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தினர்.
இந்நிலையில் முன்னாள் தலைமை நீதிபதி கே.ஜி.பால கிருஷ்ணன், "உச்ச நீதிமன்ற நீதிபதிகள் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியது துரதிர்ஷ்டவச மானது," என்றார். "நீதிபதிகள் அவர்களுக்கு இடையிலான பிரச்சினையை அவர்களே சரிசெய்துக் கொள்ள வேண்டும். "நீதித்துறையானது பொது மக்களின் புனிதமான இடமாகும். இதுபோன்ற சூழ்நிலைகள் நீதித் துறையின் மீது சந்தேகத்தைத் தூண்டும். இவ்வாறு நடந்து இருக்கக்கூடாது," என்றார்.

