இந்திய உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு எதிராக நான்கு நீதிபதிகள் செய்தியாளர் கூட்டத்தின் மூலம் மக்கள் மன்றத் தில் முறையிட்டனர். இதையடுத்து, அவர்களைச் சமரசம் செய்து, பிரச்சினைக்குத் தீர்வு காணும் முயற்சியில் இந்திய வழக்கறிஞர் கள் சங்கம் (பார் கவுன்சில்) இறங்கியுள்ளது. இதற்காக ஏழு பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்திய வரலாற்றில் முன்னெப் போதும் இல்லாத வகையில் திரு செல்லமேஸ்வர், திரு ரஞ்சன் கோகோய், திரு மதன் பி.லோகுர், திரு குரியன் ஜோசஃப் ஆகிய உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கடந்த வெள்ளிக்கிழமை செய்தியாளர் களைச் சந்தித்தனர்.
அப்போது, உச்ச நீதிமன்ற நிர்வாகம் சரியாக இல்லை என்றும் கடந்த சில மாதங்களாக அங்கு விரும்பத்தகாத நிகழ்வுகள் இடம் பெற்று வருவதாகவும் தலைமை நீதிபதி மற்ற நீதிபதிகளைக் கலந் தாலோசிக்காமல் தானாகவே எல்லா முடிவுகளை எடுப்பதாகவும் கூறி, தங்கள் குமுறல்களை வெளிப்படுத்தினர். நீதிபதிகளிடையே ஏற்பட்ட இந்த திடீர் மோதலை அடுத்து, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, சட்ட அமைச்சர், சட்ட துணை அமைச்சர், நிதியமைச்சர் ஆகியோ ருடன் அவசர ஆலோசனை மேற் கொண்டார். ஆயினும், நீதிபதிகளிடையே எழுந்துள்ள பூசலுக்கு அவர்களாகவே தீர்வு கண்டுவிடுவர் என்ற நம்பிக்கையில், அந்தப் பிரச்சினை யில் தலையிடமாட்டோம் என்று பிரதமர் அறிவித்துவிட்டார். பிரதமரின் அறிவிப்பை வரவேற் றுள்ள வழக்கறிஞர்கள் சங்கம், மூத்த நீதிபதிகள் செய்தியாளர் களைச் சந்தித்தது துரதிர்ஷ்டவச மானது என்று கூறியது.

