தென்னாப்பிரிக்கா 335 ஓட்டங்கள்

தென்னாப்பிரிக்கா 335 ஓட்டங்கள்

1 mins read

செஞ்சுரியன்: இந்திய, தென் ஆப்பிரிக்க அணிகளுக்கிடையே நடந்துவரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தென்னாப் பிரிக்க அணி முதல் இன்னிங்சில் 335 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. தென்னாப்பிரிக்கா சென்றுள்ள இந்திய அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் ஆட்டத்தில் இந்தியா தோல்வி அடைந்தது. இந்த நிலையில், இரண்டாவது போட்டி நேற்று முன்தினம் தொடங்கியது.

இந்திய அணியில் புவனேஸ்வர் குமார், சாஹா நீக்கப்பட்டு இஷாந்த் சர்மா, பார்த்திவ் பட்டேல் சேர்க்கப்பட்டனர். தொடக்க வீரர் ‌ஷிகர் தவானுக்குப் பதிலாக லோகேஷ் ராகுல் இடம்பெற்றார். முதல் நாள் முடிவில் தென் ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங் சில் ஆறு விக்கெட் இழப்பிற்கு 269 ஓட்டங்கள் எடுத்திருந்தது. இரண்டாவது நாளான நேற்று அந்த அணி மேலும் 76 ஓட்டங் களைச் சேர்த்த நிலையில் அதன் முதல் இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது.

தென்னாப்பிரிக்க அணியின் தலைவர் டு பிளஸ்ஸி சிறப்பாக விளையாடி அரை சதம் அடித்தார். மகராஜ் 18 ஓட்டங்களில் ஷமி பந்தில் ஆட்டமிழந்தார். இஷாந்த் பந்துவீச்சில் 11 ஓட்டங்களில் ரபாடாவும் அஸ்வின் பந்தில் மோர்னே மோர்கல் ஆறு ஓட்டங் களிலும் ஆட்டமிழந்தனர்.