தமிழக முதல்வர் பழனிசாமியின் தண்ணீர் கோரிக்கையை நிராகரித்த ஆந்திர முதல்வர்

தமிழக முதல்வர் பழனிசாமியின் தண்ணீர் கோரிக்கையை நிராகரித்த ஆந்திர முதல்வர்

1 mins read
9b9550ba-bb59-4802-90a8-6db878f6b1bc
-

சென்னை: தமிழக விவசாயிகளின் டெல்டா பாசனத்திற்கு உடனடியாக 7 டிஎம்சி தண்ணீரைத் திறந்துவிட வேண்டும் என்ற தமிழக முதல்வரின் கோரிக்கையை நிராக ரித்துள்ளார் கர்நாடக முதல்வர். கர்நாடகாவின் தேவையைப் பூர்த்தி செய்யவே போதுமான தண்ணீர் இல்லை என முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு தமிழகத்தில் பருவ மழை ஓரளவு நன்றாகப் பேய்தபோதிலும் விவசாயப் பணி களுக்குப் போதுமான தண்ணீர் கிடைக்கவில்லை. தற்போது மேட் டூர் அணையின் நீர்மட்டம் 21 டிஎம்சியாகக் குறைந்துள்ளது. இதையடுத்து டெல்டா பாசனத் திற்கு உடனடியாக 7 டிஎம்சி தண்ணீர் தேவைப்படுவதாக முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இது குறித்து கர்நாடக முதல்வர் சித்தராமையாவுக்கு எழுதியுள்ள கடிதத்தில், தமிழகத்தில் பயிர் பாசனத்திற்காக கர்நாடகா அரசு குறைந்த பட்சம் 15 டிஎம்சி தண்ணீர் திறந்துவிட வேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். கர்நாடகாவில் பாசனங்கள் முடிந்துள்ள நிலையில் அங்குள்ள அணைகளில் 40.82 டிஎம்சி தண்ணீர் உள்ளதாக சுட்டிக்காட்டி யுள்ள அவர், மேட்டூர் அணையின் நீர்மட்டம் வெகுவாகக் குறைந் துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இந்நிலையில் தமிழகத்திற்குத் தண்ணீர் திறந்துவிட முடியாது என கர்நாடகா முதல்வர் திட்ட வட்டமாகக் கூறியுள்ளார். "அடுத்த மாதம் காவிரி வழக்கில் இரு மாநிலங்களுக்கும் நல்ல தீர்ப்பு வரும் என நம்புவோம்," என்றும் சித்தராமையா தெரிவித்துள்ளார்.