சிறப்பாக நடந்தேறியது மதுரை அவனியாபுரம் மஞ்சுவிரட்டு

சிறப்பாக நடந்தேறியது மதுரை அவனியாபுரம் மஞ்சுவிரட்டு

1 mins read
d84ae101-2ad7-4edc-9580-ac3ca3d2f566
-

மதுரை: பொங்கல் பண்டிகையை யொட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் மஞ்சுவிரட்டுப் போட்டி நடைபெற உள்ளது. முதற் கட்டமாக மதுரை மாவட்டம் அவ னியாபுரத்தில் நேற்று மஞ்சுவிரட் டுப் போட்டி சிறப்பாக நடந்தேறி யது. உச்ச நீதிமன்ற வழிகாட்டுத லின்படி தமிழகத்தில் மஞ்சுவிரட் டுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்த ஆண்டுக் கான மஞ்சுவிரட்டு உலகளவில் பிரசித்தி பெற்ற அவனியாபுரத்தில் நேற்று தொடங்கியது.

போட்டி தொடங்குவதற்கு முன்பாக இதில் பங்கேற்ற காளை களுக்குச் சிறப்புப் பூசை நடை பெற்றது. இதையடுத்து விழா மற்றும் போட்டிக்கான ஏற்பாடு களை மாவட்ட ஆட்சித் தலைவர் ஆய்வு செய்தார். அதன் பின்னர் போட்டி பலத்த கரவொலிகளுக்கு மத்தியில் துவங்கியது. இந்த ஆண்டு மொத்தம் 954 காளைகள் கள மிறக்கப்பட்டன. அவற்றை அடக் குவதற்கு 500க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் போட்டியில் குதித்தனர்.

மஞ்சுவிரட்டுக் காளையை அடக்க முயற்சிக்கும் வீரர்கள். படம்: தகவல் ஊடகம்