திருச்சி: திருப்பராய்த்துறையில் உள்ள கோவிலின் சிலைகள் திடீரென மாயமானது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலிசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். திருச்சி மாவட்டம் திருப்பராய்த் துறையில் அமைந்துள்ளது தாருகா வணேஸ்வரர் கோவில். இக்கோவி லில் இருந்த மூன்று உலோக சிலைகள் அண்மையில் திடீரென மாயமாகின.
இது குறித்து போலிசாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதை யடுத்து சிலைக் கடத்தல் தடுப்புப் போலிசார் நேற்று முன்தினம் அக் கோவிலில் விசாரணை நடத்தினர். தாருகாவணேஸ்வரர் கோவில் ஏழாம் நூற்றாண்டில் அமைக்கப் பட்ட கோவிலாகும். எனினும் மாய மான சிலைகள் எந்த நூற் றாண்டைச் சேர்ந்தவை, அவற்றின் மதிப்பு என்ன? என்பன போன்ற விவரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை. சிலைகள் விரைவில் மீட்கப் படும் என சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு ஐஜி பொன்.மாணிக்கவேல் தெரிவித்துள்ளார்.

