கார், பேருந்து மோதல்: 6 பேர் பலி

கார், பேருந்து மோதல்: 6 பேர் பலி

1 mins read

ஓசூர்: அரசு பேருந்து மீது கார் மோதிய விபத்தில் பள்ளி மாணவர்கள் உட்பட ஆறு பேர் பலியான சம்பவம் ஓசூர் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. நேற்று முன்தினம் பெங்களூருவில் இருந்து வேலூர் நோக்கி அரசுப் பேருந்து ஒன்று வந்து கொண்டிருந்தது. சூளகிரி அருகே அப்பேருந்தின் மீது எதிரே வந்த கார் ஒன்று சாலைத் தடுப்புகளைக் கடந்து வந்து மோதியது. இதில் இரு வாகனங்களும் கவிழ்ந்தன. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த பள்ளி மாணவர்கள் நால்வர் உட்பட ஆறு பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் பேருந்து பயணிகள் 30 பேருக்கு காயம் ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.