திருச்சி: துறையூர் அருகே நடைபெற்ற வாகனச் சோதனையின் போது ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள பழைய ரூபாய் நோட்டு கள் சிக்கியது. நேற்று முன்தினம் காலை போலிசார் உப்பிலியபுரத்தில் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியே வந்த கார் ஒன்றை நிறுத்தி சோதனையிட்டனர். இதில் காரின் பின்பகுதியில் ரூ.77.50 லட்சம் மதிப்பிலான பழைய 1,000 ரூபாய் நோட்டுகளும் ரூ.22.50 லட்சம் மதிப்பிலான பழைய 500 ரூபாய் நோட்டுகளும் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவை பறிமுதல் செய்யப் பட்டு, காரில் வந்த நால்வரும் விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.
பழைய ரூபாய் நோட்டுகள் பறிமுதல்
1 mins read

