சென்னை: காணும் பொங்கல் தமிழகம் முழுவதும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. நேற்று தமிழகம் முழுவதிலும் உள்ள பொழுதுபோக்கு மற்றும் சுற்றுலாத் தலங்களில் மக்கள் கூட்டம் அலை மோதியது. தமிழகத்தில் காணும் பொங்கல் தினத்தன்று வெளியே சென்று கொண்டாடுவது வழக்கமாக உள் ளது. அந்த வகையில் இந்த ஆண்டும் கொண்டாட்டங்கள் களைகட்டின. நேற்று காலை முதலே சென்னை கடற்கரை உட்பட தமிழகம் முழுவ தும் உள்ள கடலோரப் பகுதிகளில் ஏராளமானோர் கூடினர். இதே போல் வண்டலூர் உயிரியல் பூங்கா, அடையாறு பாம்புப் பண்ணை உள்ளிட்ட இடங்களில் கூட்டம் அதிகமாக இருந்தது. பொது இடங்களில் கூடிய பலர் வீட்டில் இருந்து கொண்டுவந்த, வெளியில் வாங்கிய உணவுப் பொருட்களை ஒன்றாக அமர்ந்து உண்டு மகிழ்ந்தனர். சிறுவர், சிறு மியர் திறந்தவெளியில் உற்சா கத்துடன் ஓடியாடி விளையாடினர்.
நேற்று காலையிலேயே மெரினா கடற்கரையில் கூடிய மக்கள் கூட்டம். படம்: தகவல் ஊடகம்

