இந்தியத் தலைநகர் புதுடெல்லி எனத் தெரியாத 36% மாணவர்கள்

இந்தியத் தலைநகர் புதுடெல்லி எனத் தெரியாத 36% மாணவர்கள்

1 mins read

புதுடெல்லி: அண்மையில் நடத்தப்பட்ட புதிய ஆய்வு ஒன்றில் கலந்து கொண்டவர்களில் 36 விழுக்காட்டினருக்கு இந்தியா வின் தலைநகர் புதுடெல்லி என் பது தெரியவில்லை எனத் தெரிய வந்துள்ளது. 2017ஆம் ஆண்டு இந்திய கல்வி அறிக்கை அறிக்கை (ASER) வெளியிடப்பட்டு உள்ளது. நாட்டில் மாணவர்களிடம் கல்வி, பொது அறிவு நிலை எந்த அளவுக்கு இருக்கிறது என்பதை அறிய வருடாந்திர கல்வி நிலைத் தகவல் என்ற பெயரில் ஆய்வு நடத்தப்பட்டது.

'அடிப்படைக்கு அப்பால்' என்ற தலைப்பிட்டு இந்த ஆய்வை அரசுசாரா தொண்டு நிறுவனம் மேற்கொண்டது. 24 மாநிலங்களில் 28 மாவட் டங்களைத் தேர்வு செய்து 30,000 மாணவர்களிடம் ஆய்வை நடத்தினர். அதில் மாணவர்களின் கல் வித் திறனும் பொது அறிவுத் திறனும் மிக மோசமாக இருப்பது தெரியவந்தது. அதிலும் கிராமப்புற மாண வர்கள் மிகவும் பின்தங்கி இருப் பதும் தெரிந்தது. கிராமப்புறங்களில் 14 வயது முதல் 18 வயது கொண்டவர்களில் 4ல் ஒருவருக்குத் தங்களது தாய்மொழியைக் கூட சரியாக வாசிக்க முடியவில்லை.