காந்தி ஆசிரமத்தில் ராட்டையில் நூல் நூற்ற இஸ்ரேல் பிரதமர்

காந்தி ஆசிரமத்தில் ராட்டையில் நூல் நூற்ற இஸ்ரேல் பிரதமர்

1 mins read

அஹமதாபாத்: இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகுவும் இந்தியப் பிரதமர் மோடியும் அகம தாபாத்தில் உள்ள டியோ தோலரா கிராமத்தில் 'ஐகிரியேட்' சென்டர் என்ற மையத்தைத் தொடக்கிவைத்த பின், சபர்மதியில் உள்ள மகாத்மா காந்தி ஆசிரமத்திற்குச் சென்ற னர். அங்கு மகாத்மா காந்திக்கு அஞ்சலி செலுத்திய நெட்டன்யாகு வும் அவரது மனைவியும் ராட்டை யில் நூல் நூற்றனர்.

சபர்மதி ஆசிரமத்தில் இருந்த காந்தி பயன்படுத்திய பொருட் களையும் அவர்கள் ஆர்வமுடன் பார்வையிட்டனர். தொடர்ந்து சபர்கந்தா மாவட்டத்தில் உள்ள வத்ராட்டில் உள்ள காய்கறி மையத்தை பார்வை யிட்டதுடன் குகாமாவில் பேரீச்சை பண்ணையையும் அவர்கள் காணொளி மூலம் தொடங்கி வைத்து, விவசாயிகளுடனும் கலந்துரையாடினர். பின்னர் நெட்டன்யாகுவும் அவரது மனைவி சாராவும் சபர்மதி ஆற்றங்கரை ஓரம் மோடியுடன் சேர்ந்து பட்டம் விட்டனர். ஆறு நாள் பயணமாக தனது மனைவியுடன் இந்தியா வந்துள்ள இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு, நேற்று பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத்திற்குப் பயணம் மேற் கொண்டார்.