ரூ.6 லட்சத்திற்கு மேல் நகை வாங்கினால் தகவல் தெரிவிக்கவேண்டும்

ரூ.6 லட்சத்திற்கு மேல் நகை வாங்கினால் தகவல் தெரிவிக்கவேண்டும்

2 mins read

இந்தியாவில் இனிமேல் ஆறு லட்ச ரூபாய்க்கு (S$12,550) மேல் பொருள் வாங்கும் அந்நாட்டவர் கள் அது குறித்து நிதிப் புலனாய்வு பிரிவுக்குத் தகவல் தெரிவிக்க வேண்டியிருக்கலாம். கறுப்புப் பணப் பரிமாற்றத்தைத் தடுக்கும் முயற்சியாக இந்தப் புதிய சட்டத்தை அமல்படுத்துவது குறித்து இந்திய அரசாங்கம் தீவிரமாக ஆராய்ந்து வருகிறது. முக்கியமாக இந்த வரம்பு நகை மற்றும் ஆடம்பரப் பொருட்களுக் குப் பொருந்தும் எனச் சொல்லப் படுகிறது. "பெரும்பாலான நாடுகளில் இப்படி தகவல் தெரிவிக்க வேண் டிய பரிவர்த்தனைக்கான வரம்பு 10,000 அமெரிக்க டாலராக இருக் கிறது," என்றார் பெயர் கூற விரும்பாத ஓர் அரசாங்க அதிகாரி. "இந்த வரம்பு குறித்து ஆலோ சனை நடந்து வருகிறது. அதை ஆறு லட்ச ரூபாயாக நிர்ணயிக்க பலரும் இணக்கம் தெரிவித்துள் ளனர்," என்று அந்த அதிகாரி கூறினார்.

இவ்வாறு அளிக்கப்படும் தக வல்கள் கறுப்புப் பணப் பரிமாற்றத் தைக் கண்டுபிடிக்க அமலாக்கத் துறைக்கு உதவும். அதோடு, தனி நபர்கள் தங்களின் வருமானத் துக்குப் புறம்பான வழியில் கிட்டிய பணத்தைக் கொண்டு ஆடம்பரப் பொருட்களை வாங்கியுள்ளனரா என்பதைக் கண்டறிய வருமான வரித் துறையினருக்கும் உதவும். கறுப்புப் பணத்தைக் கண்டு பிடிக்கவும் சட்டவிரோதப் பணப் பரிமாற்றங்களைத் தடுக்கவும் பாரதிய ஜனதா கட்சி தலைமை யிலான தேசிய ஜனநாயகக் கூட் டணி அரசு பல்வேறு நடவடிக்கை களை எடுத்து வருகிறது. கறுப்புப் பணப் பரிவர்த்தனை களுக்கு வகை செய்யும் போலி நிறுவனங்களைக் கண்டறிந்து அவற்றின் உரிமங்களை ரத்து செய்தல், பினாமி பரிவர்த்தனைச் சட்டத்தை வலுப்படுத்துதல் போன்ற நடவடிக்கைகள் அவற்றில் சில.