வாத்து போல் நடக்க வைத்த தண்டனை உயிரைப் பறித்தது

வாத்து போல் நடக்க வைத்த தண்டனை உயிரைப் பறித்தது

1 mins read

சென்னை: பள்ளிக்கு தாமதமாக வந்த மாணவனுக்கு உடற்பயிற்சி ஆசிரியர் அளித்த தண்டனை அவனது உயிரைப் பறித்துவிட்ட தாக புகார் எழுந்துள்ளது. இதை யடுத்து உடற்பயிற்சி ஆசிரியரும், பள்ளியின் தலைமை ஆசிரியரும் கைதாகி உள்ளனர். சென்னை பெரம்பூரைச் சேர்ந்த முரளி என்பவரின் 15 வயது மகன் நரேந்தர் திருவிக நகரில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வந் தான். நேற்று முன்தினம் பொங்கல் விடுமுறை முடிந்து பள்ளி திறக்கப்பட்டது. நரேந்தர் பள்ளிக்குச் செல்ல பத்து நிமிடங்கள் தாமதமானதாகத் தெரிகிறது.

இதையடுத்து பள்ளி வளாகத்தில் வாத்து போல், முட்டி போட்டு நடக்கும் தண்டனையை அளித்துள்ளார் உடற்பயிற்சி ஆசிரியர் ஜெய்சிங். அவரது உத்தரவை நிறைவேற் றிய பின்னர் வகுப்பறைக்குச் சென்றுள்ளான் நரேந்தர். வகுப் பறையில் அமர்ந்திருந்த அவன் சிறிது நேரத்தில் திடீரென மயங்கி விழுந்துள்ளான். இதையடுத்து நரேந்தரை அரு கில் உள்ள தனியார் மருத்துவ மனைக்கு அழைத்துச் சென்றுள் ளனர். மாணவன் சுயநினைவின்றி இருந்ததால் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தது தனி யார் மருத்துவமனை நிர்வாகம்.