மாட்டுக்கு பிறந்தநாள்: விருந்து கொடுத்த விவசாயி

1 mins read
992c98ea-e143-4d05-ab5a-906557e1114e
-

தனது பசுமாட்டின் 22வது பிறந்தநாளை விவசாயி ஒருவர் உறவினர்களுக்கு அழைப்பிதழ் கொடுத்து வரவழைத்து, கேக் வெட்டி, விருந்து வைத்து கொண்டாடி உள்ளார். பெத்தனாச்சி என்ற பெயர் கொண்ட அம்மாடு 14 கன்றுக்குட்டிகளை ஈன்றுள்ளது. "பொதுவாக மாடுகளில் கொள்ளுப்பேத்தி, எள்ளுப்பேத்தி எடுப்பது மிக அபூர்வம். ஆனால் பெத்தனாச்சி பசு ஐந்து தலைமுறைகள் பார்த்துவிட்டது. எனவேதான் அதன் பிறந்தநாளை பெரிய அளவில் கொண்டாடினோம்," என்கிறார் விவசாயி பார்த்திபன். மத்திய அரசின் சிறந்த கால்நடை பராமரிப்பாளர் விருதுக்கு இவர் விண்ணப்பித்த நிலையில், விருது கிடைக்கவில்லை. இதையடுத்து நீதிமன்றம் சென்றுள்ளார். "விருதுக்காகவும் விளம்பரத்துக்காகவும் இதைச் செய்யவில்லை. எனது பசுவின் வயதை வரலாற்றில் இடம்பெறச் செய்யவே இந்தப் போராட்டம்," என்கிறார் பார்த்திபன். படம்: தகவல் ஊடகம்