பெங்களூரு சிறையில் சலுகை கள் பெற சசிகலா லஞ்சம் கொடுத்தது பற்றி மீண்டும் ஒரு விசாரணையை நடத்த கர்நாடக அரசு திட்டமிடுகிறது. பெங்களூரு பரப்பன அக்ர ஹார சிறையில் இருக்கும் சசிகலா சிறையில் பல்வேறு சலுகைகளை அனுபவிப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதையடுத்து, கடந்த ஆண்டு ஜூலை மாதம் எட்டாம் தேதி சிறைத்துறை அதிகாரி ரூபா பரப்பன அக்ரஹார சிறைக்குச் சென்று சோதனை நடத்தினார். சசிகலாவுக்கு உணவு தயா ரித்துக் கொடுக்க தனி சமையல் அறை உருவாக்கப்பட்டிருந்தது, சசிகலாவும் இளவரசியும் சட்ட விரோதமாக வெளியில் சென்று வந்தது போன்றவை அப்போது கண்டுபிடிக்கப்பட்டன. இந்தச் சலுகைகளை அனு பவிக்க சசிகலா ரூ.2 கோடி வரை லஞ்சமாகக் கொடுத்திருப்பதாக சிறைத்துறை அதிகாரி ரூபா தெரிவித்தார். அதன் தொடர்பிலான விசாரணையை கர்நாடக மாநில முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி வினய்குமார் மேற்கொண்டார். அவர் தனது அறிக்கையை கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அரசிடம் தாக்கல் செய்தார்.
சசிகலாவுக்கு சலுகை: மீண்டும் விசாரணை
1 mins read

