விருதுநகர்: விருதுநகர், கோவை யில் கள்ள பணத்தை அச்சடித்து புழக்கத்தில் விட முயன்ற நால்வர் கைது செய்யப்பட்டனர். அவர்களி டம் இருந்து 65 லட்சம் ரூபாய் மதிப்பிலான கள்ள நோட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன. சாத்தூரைச் சேர்ந்த சேத்தூ ரான், 38, தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறைச் சேர்ந்த கொம் பையா, 48, என்ற இருவரிடம் கடந்த 16ஆம் தேதி ரூ.10.48 லட்சம் கள்ள பணம் கைப்பற்றப் பட்டது. கோவையைச் சேர்ந்த தன்ராஜ், 38, விக்னேஷ், 21, என்ற இருவரிடம் இருந்து கள்ள பணத்தைத் தாங்கள் வாங்கியதாக அவர்கள் தெரிவித்தனர்.
இதைத் தொடர்ந்து விக்னேஷ், தன்ராஜ் இருவரும் கோவையில் சிக்கினர். அவர்கள் வீடுகளில் ரூ. 54.57 லட்சம் கள்ள பணம் பிடிபட்டது. அந்தப் பணத்தை அவர்கள் வீட்டிலேயே அச்சடித் துள்ளனர். கள்ள பணம் அச்சிட பயன்படுத்திய அச்சு எந்திரம், வண்ண மை, காகிதம், காகிதத் தில் இருந்து வெட்டப்படாத பணம் எல்லாம் பிடிபட்டன. ரூ. 1 லட்சம் கள்ள பணம் கொடுத்தால் ரூ. 20,000 நல்ல பணம் கொடுக்கவேண்டும் என்ற அடிப்படையில் கள்ள பணம் ரகசிய பேர்வழிகள் மூலம் புழக்கத் தில் விடப்பட்டதாக விக்னேஷ் தெரிவித்தார்.

